முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை இடைத்தேர்தல்: 4வது வார்டில் 40% வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

மதுரை, செப் 19 - மதுரை மாநகராட்சி 4வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நேற்று 40 சதவீத வாக்குகள் பதிவாகின.

மதுரை மாநகராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்த ஆர். கோபாலகிருஷ்ணன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு மதுரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து மதுரை மாநகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக சண்முகம், இடது கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அர்ச்சுணன் உள்ளிட்ட 5பேர் போட்டியிட்டனர். இதற்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 4வது வார்டு முழுவதும் 26 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வார்டில் மொத்தம் 21,525 வாக்காளர்கள் உள்ளனர்.

மேற்கண்ட 26 வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பெண்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றது.இந்த 4வது வார்டு இடைத்தேர்தலில் மொத்தம் 40 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று இரவு பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு எடுத்து செல்லப்பட்டு தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. வருகிற 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்