முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்களுக்கு லட்டு வழங்க ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, செப் 20 - திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் வருகிற 26ம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் வாகன வீதியுலா நடக்கிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த நேரத்தில் கோவிலுக்குள் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வரும் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்க சிரமப்படுவார்கள். இந்த சிரமத்தை தவிர்க்க பிரம்மோற்சவ நாட்களில் டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதத்தை கோவிலுக்குள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

கடந்த முறை கருட சேவையின் போது மட்டும் இந்த முறை பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு எல்லா நாட்களும் இதே போல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராவ் கூறினார். மேலும் பிரம்மோற்சவ காலங்களில் தட்டுப்பாடு இல்லாமல் லட்டு கிடைக்க 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இது தவிர ர ூ. 2 5க்குரிய லட்டு விநியோகம் வழக்கம் போல் கவுண்டரில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டையில் கூடுதலாக 878 நாவிதர்கள் இலவசமாக சேவை செய்ய முன்வந்து உள்ளார்கள். இவர்கள் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை சேவை செய்வார்கள். பக்தர்களின் தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் கோவிலுக்கு ரூ. 63.98 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வருகிற 30ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் 2 மலை பாதையிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்த அலிபிரியில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்