முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவத்தில் முறைகேட்டை தடுக்க புதிய விதிமுறைகள்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 20:

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளையும், டாக்டர்களின் தவறுகளையும் தடுக்க புதிய விதிமுறைகளை வகுக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விதிமுறைகள் விரைவில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

நாடு முழுவதும் பல தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. நோயாளி இறந்த பின்பும் சடலத்தை வைத்து கொண்டு சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்ததாக தமிழகத்தில் ஒரு மருத்துவமனை மீது குற்றம் சாட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற முறைகேடுகளை தடுக்கவும், டாக்டர்கள் தொழில் தர்மத்தை மறந்து அத்துமீறி நடப்பது, தவறு செய்வது போன்றவற்றை தடுக்கவும் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் டாக்டர்கள் சங்கமான இந்தியன் மெடிக்கல் அசோசியேசனும், இந்திய மருத்துவமனைகள் சங்கமும் இணைந்து புதிய விதிமுறைகளை வகுக்க திட்டமிட்டுள்ளன. டாக்டர்களின் தவறுகளையும், மருத்துவமனைகளின் முறைகேடுகளையும் தடுக்கும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக கமிட்டி ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளன. இந்த கமிட்டி புதிய நெறிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐஎம்ஏ அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் டிசம்பர் 28ம் தேதி பதவியேற்க உள்ளனர். அவர்களின் முயற்சியால் இந்த கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஎம்ஏ புதிய செயலாளராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் கே.கே. அகர்வால் கூறுகையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டி வகுத்து தரும் நெறிமுறைகளை மத்திய அரசிடம் பரிந்துரைப்போம். அரசு அதை பரிசீலித்து புதிய சட்ட விதிகளை இயற்றலாம். தற்போது அமலில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப புதிய விதிமுறைகள் வகுக்கப்படும். இதன் மூலம் மருத்துவதுறையில் உள்ள கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு அவர்களை தகுதி நீக்கம் செய்ய வழி ஏற்படும். தற்போது மருத்துவமனைகளை மருத்துவ கவுன்சில் கட்டுப்படுத்துவதில்லை. புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது நாடு முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரம் மருத்துவமனைகள் இதன் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். ஐஎம்ஏ புதிய தலைவராக டாக்டர் மார்த்தாண்டம் பிள்ளை டிசம்பரில் பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்