முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் இன்னசென்ட் அலுவலக மின் இணைப்பு துண்டிப்பு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப் 20:

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இன்னசென்ட். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சாலக்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்பு சாலக்குடியில் அலுவலகம் அமைத்து பொதுமக்களின் குறைகள் மற்றும் மனுக்களை வாங்கி வந்தார். இந்த அலுவலக மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்தை அலுவலக மேனேஜர் கட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலக்குடி மின்வாரிய ஊழியர்கள் திடீரென இவரது அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து சென்றனர். இது பற்றி அலுவலக மேனேஜர் மற்றும் ஊழியர்கள் மின்வாரியத்தினரிடம் கேட்ட போது கடந்த மாத மின் கட்டணம் ரூ. 365ஐ கட்டாததால் மின் வாரியம் உங்கள் அலுவலக மின் இணைப்பை துண்டிக்க சொன்னது. எனவே இணைப்பை நாங்கள் துண்டித்துள்ளோம். இனி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அபராத கட்டணம் செலுத்தி  மீண்டும் மின் இணைப்பை பெற்று கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். மின் கட்டணம் செலுத்துவது பற்றி மின்வாரியத்தில் இருந்து எங்களுக்கு முறையான ரசீது வரவில்லை என்றும் இதனால்தான் மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் எம்.பி. அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். எம்.பி. அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அங்கு மனு கொடுக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களின் குறைகளை பதிவு செய்த கம்ப்யூட்டர்கள் இயங்காமல் போனதாகவும் அலுவலக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்