முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் வெள்ள சேதம் ரூ.60 ஆயிரம் கோடியாம்!

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப் 20 - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதம் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடு, வாசல்களை இழந்து தவித்து வருகின்றனர். சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். ராணுவத்தினரின் அயராத பணி காரணமாக சுமார் 2. 5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநில அரசு வெள்ள சேதம் குறித்து ஆய்வு பணிகளை நடத்தி வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டு சேத மதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். மேலும் அமைச்சர்கள் குழுவும் நேரடியாக மக்களை சந்தித்து நிவாரண பணிகளை பார்வையிட்டு வருகிறது. இதற்கிடையில் உலகம் முழுவதிலும் இருந்து காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்காக நிதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும் காஷ்மீர் நிவாரணத்திற்காக நிதி உதவி அளித்துள்ளன. மேலும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் காஷ்மீரை மீட்க இந்த நிதி போதாது. மேலும் நிதி உதவி செய்ய வேண்டும் என முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ரூ. 1.5 கோடி நிதி உதவி அளித்துள்ளது. இதற்கிடையில் வெள்ள மதிப்பு குறித்து தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் காஷ்மீரில் வெள்ள சேத மதிப்பு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் தொழில் மற்றும் வர்த்தக சங்க தலைவர் ஷேக் ஆசிக் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப கட்ட கணிப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் இவற்றை சரி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் மறு கட்டுமான பணிகளை விரைந்தும் தொடங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago