முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல இசை கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மரணம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 – பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் கல்லீரல் பிரச்சினை தொடர்பாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3 ந்தேதி சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று

காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 45.

மாண்டலின் சீனிவாஸ் 1969-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள பாலகோலில் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி பிறந்தார். இவரது தந்தை மாண்டலின் சத்யநாராயணா. சீனிவாஸ் தனது 6 வயது முதல் தனது தந்தையுடன் மாண்டலின் இசைபயனத்தை தொடங்கினார். அவரது தம்பி ராஜேஷ்சும் மாண்டலின் கலைஞர். சீனிவாஸ் 1994-ம் மே 27-ல் ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

யுவஸ்ரீக்கும் மாண்டலின் சீனிவாஸ்க்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்தானது. சீனிவாஸ் பத்மஸ்ரீ(1988), சங்கீதா ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்