முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு விவரம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - தமிழகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இடைத்தேர்தலில் நகரங்களை விட கிராமங்களில் அதிக ஓட்டு பதிவானது.

தமிழகத்தில் நேற்றுமுன்தினம் கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், விருத்தாசலம், அரக்கோணம், கடலூர் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 530 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே சில பகுதிகளில் லேசான மோதல் ஏற்பட்டது. ஆனாலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லை. இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததாகதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தலில் 53.89 சதவீத ஓட்டுகளும், கோவை மேயர் தேர்தலில் 44.59 சதவீத வாக்குகளும் பதிவானது. நகராட்சி தலைவர்கள் தேர்தலில் விருத்தாசலத்தில் அதிகபட்சமாக 67.43 சதவீத வாக்குகளும், கடலூரில் 59.62 சதவீதமும், ராமநாதபுரத்தில் 54.57 சதவீதமும், அரக்கோணத்தில் 45 சதவீதமும் பதிவானது.

சென்னை 35-வது வார்டில் 45 சதவீத வாக்குகள் பதிவானது. பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 73.34 சதவீதமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர் மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கான தேர்தலில் சராசரியாக 68 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.

வாக்குப்பதிவு எந்திரங்களும், ஓட்டுப் பெட்டிகளும் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 22-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்