முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்ககாசு மோசடி வழக்கு: பாதிக்கப்பட்டவர்கள் வர அழைப்பு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - தமிழகம் உட்பட அகில இந்தியாவை உலுக்கிய தங்ககாசு மோசடி வழக்கில் சுமார் 32,011 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வழக்கு சென்னை செம்பியம் போலீசாரால் பதியப்பட்டு சிபிசிஐடி புலனாய்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் எதிரிகளாக ணசீடீஙூசிடூடீசி நிறுவனம் உட்பட 25 பேரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி மோசடி நிறுவனத்திடமிருந்து சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு அந்த சொத்துக்கள் நீதிமன்றம் மூலமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் இந்நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 32,011 முதலீட்டாளர்களை விசாரணை செய்து குற்ற அறிக்கை சமர்ப்பிக்கும்படி மேல் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கு சம்மந்தமாக சென்னையை சேர்ந்த முதலீட்டாளர்கள் அனைவரும் விசாரணைக்காக ணசீடீஙூசிடூடீசி நிறுவனத்தினரால் அளிக்கப்பட்ட ஆவணங்களுடன் மற்றும் நகலுடன் கீழ்கண்ட குற்றப்புலனாய்வு துறை அலுவலக முகவரியில் வருகிற 30_ம் தேதி காலை 9.30 மணி முல் மாலை 5.00 மணிக்குள்ள நேரில் தங்களது புகாரின் விவரங்களை தெரிவிக்கும்படி சிபிசிஐடி போலீசார் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்