முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபர் பெயரை தவறாக உச்சரித்த செய்தி வாசிப்பாளர் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.20 - சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரை தவறாக உச்சரித்த தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். அவர் இந்தியா வருவது இது முதல் முறை என்பதால், அவரது வருகை, அரசியல் சந்திப்புகள், ஆலோசனைகள் குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியாகின.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பெண் ஒருவர், சீன அதிபரின் பெயரில் இருந்த 'Xi' என்ற பகுதியை 'ஜி' என வாசிக்காமல் ரோமன் எண்வரிசையில் வரும் '11' என வாசித்தார். அதாவது 'Eleven Jinping' என அவர் வாசித்தார். இதனையடுத்து, செய்தி வாசிக்கும் பணியில் இருந்து அந்தப் பெண் சில மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தூர்தர்ஷன் அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சம்பந்தப்பட்ட பெண் வாசிப்பாளரை சில மாதங்களுக்கு செய்தி வாசிக்கும் பணியில் இருந்து நீக்கியுள்ளோம். இது மன்னிக்க முடியாத தவறு. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால்தான் இது போன்ற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களை பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago