முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபருடன் மன்மோகன் - சோனியா காந்தி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.20 - இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கியுள்ள டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்ஜிங்கின் இந்த பயணத்தின்போது இந்தியாவும் சீனாவும் 12-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1.22 லட்சம் கோடி அளவுக்கு மூதலீடு செய்ய சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பொருட்களுக்கு சீனாவில் விற்பனை வசதியையும் செய்து கொடுக்க சீனா சம்மதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்