முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா தேர்தல்: 125 தொகுதிகளை கேட்க்கும் பாஜ!

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப். 20 - மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு கால பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பாஜக பிடிவாதம் காட்டி வருகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் எப்படியும் வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்பது பாஜக மற்றும் சிவசேனாவின் கணக்கு.

பாஜகவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. சிவசேனாவோ கடந்த 2009-ல் போட்டியிட்ட 169 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது.

இதனால் இரு கட்சிகள் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்தது. இந்த நிலையில் மும்பையில் பாஜக தலைவர் அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாஜகவின் சுயமரியாதையை கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் சிவசேனாவுக்கு பாஜக 12 மணி நேர கெடு விதித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 125 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சற்று இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 119 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்கிறது சிவசேனா. இதனால் மராட்டிய மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 10 மாநில இடைதேர்தலில் ஏற்பட்ட சரிவை சரிக்கட்டும் பொருட்டு பிரதமர் மோடியையே தேர்தல் பிரச்சார களத்தில் இறக்க பாஜக முடிவு செய்துள்ளது. காரணம் மராட்டியத்தில் பாஜகவுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் இல்லை. எனவே மோடியையே களமிறக்கி வெற்றி வாகை சூடுவது என்ற முடிவில் உள்ளது பாஜக. மேலும் சிவசேனா தாம் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க மறுத்தால் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கும் வந்து விட்டது பாஜக. ஆக, மராட்டிய மாநிலத்தில் பாஜக, சிவசேனையின் கால் நூற்றாண்டு கூட்டணி முறியும் நிலைக்கு வந்து விட்டது. இந்த நிலையில் தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கும் சிவசேனா அதற்கு ஒரு காரணத்தை கூறுகிறது. பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் கடந்த 25ஆண்டுகளாக நெருங்கிய உறவும் கூட்டணியும் இருந்து வருகிறது. பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியை ஆள்வதால் மனிதாபிமானத்துடன் மகராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்து ஆட்சியில் அமர வைக்க பாரதீய ஜனதா உதவ வேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத்ஷா, கட்சியின் மரியாதையை கூட்டணிக்காக விட்டு கொடுக்க முடியாது என்று கூறி உள்ளார். எனவே இந்த கூட்டணி முறியும் நிலைக்கு வந்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்