முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய பேச்சு: ஹேமா மாலினி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.20 - விதவைகள் பற்றி பேசியதற்கு ஹேமாமாலினி விளக்கம் அளித்துள்ளார். நடிகையும் மதுரா தொகுதி பாஜ எம்பியுமான ஹேமாமாலினி சில நாட்களுக்கு முன், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா விரிந்தாவனத்தில் உள்ள ஆதரவற்றோம் இல்லங்களில் 40 ஆயிரம் விதவைகள் தங்கியுள்ளனர். இவர்கள் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களது மாநிலத்தில் நல்ல வழிபாட்டு தலங்கள் இருந்தும் இங்கு வந்து தங்குவது ஏன்? என்று கூறியிருந்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹேமாமாலினி தான் பேசியது என்ன என்பது பற்றி தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

ஒவ்வொரு தாய்க்கும் மகனாக பிறந்தவர்கள், தங்கள் தாயை புறக்கணித்து வெளியே அனுப்பி விடாதீர்கள். அவர்கள் மீது அன்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்று சொன்னேன். எனது இந்த விழிப்புணர்வு வேண்டுகோள் தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது. மதுரா விரிந்தா வனத்தில் மேற்கு வங்காளம், பீகார், ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் நிறைய தங்கியிருப்பதால் எனது பேச்சு அவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. எனது வேண்டுகோள் யாதெனில் இதில் மனிதாபிமான அடிப்படையில் பாருங்கள். ஏழை விதவைகளை காப்பாற்றுங்கள்.

மகன்களும், மகள்களும் பெற்ற தாயை காப்பாற்றுங்கள் என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. இவ்வாறு ஹேமாமாலினி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்