முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 நிகர்நிலை பல்கலை., கட்டமைப்பு வசதிகள் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 21:

தமிழகத்தில் உள்ள 14 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்கலைக் கழக மானிய குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆராய அவற்றில் புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரினார்.

யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 41 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இதற்கு நீதிபதிகள் புகைப்படங்களை கொண்டு ஆய்வு நடத்தினால் சில நேரங்களில் தவறு ஏற்பட கூடும். எனவே 41 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின்  கட்டமைப்பு வசதிகளை அறிய நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு உத்தரவிட்டனர்.

தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் தரமான கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் வி்ப்லவ்சர்மா, 2006ல் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய டாண்டன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்தது. அக்குழு நாடு முழுவதும் 122 நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு நடத்தி உள்கட்டமைப்பு வசதிகளற்ற நிலையில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்தது.

இதையடுத்து 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து ஜூலை 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பல்கலைக் கழக மானிய குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. இதற்கிடையே கட்டமைப்பு வசதிகளுக்குரிய வழிகாட்டுதல் நெறிகளை ஒரு கல்வி நிறுவனம் பூர்த்தி செய்ததால் அதற்கு நிகர்நிலை பல்கலை கழக அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இரு கல்வி நிறுவனங்கள் நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை திரும்ப ஒப்படைத்தன. இந்நிலையில் மீதமுள்ள 41 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று யுஜிசி கடந்த மாதம் கோரியது. அதை ஏற்று ஆய்வறிக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 23ம் தேதி வரை அளித்த அவகாசத்தை 30ம் தேதி வரை நீட்டித்து கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago