முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை பெருமாள் கோவிலில் சனி வார பூஜைகள்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 21 - புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவர். இந்த வருடம் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை துவங்கியது. இதனையொட்டி மதுரையில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து முழுகி பெருமாளுக்கு விரதம் மேற்கொண்டனர். காலை முதல் உணவருந்தாமல் குடும்பத்துடன் பெருமாளுக்கு கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் உணவு சமைத்து வாழை இலையில் பரிமாறி விரதம் விட்டனர். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் ஒரு குழுவாக வீடுவீடாக சென்று அரிசி மற்றும் காய்கறிகளை காணிக்கையாக பெற்று அதை கோயில் அல்லது பொது இடங்களில் வைத்து சமைத்து பெருமாளை தரிசனம் செய்து விரதமிட்டனர். இது போல் இ்ம்மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் புரட்டாசி விரதம் மேற்கொள்வார்கள். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில் உள்ளிட்ட ஏராளமான பெருமாள் கோயில்களிலும் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்