முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை பாராட்டி மக்களுக்கு அமைச்சர் இனிப்பு வழங்கினார்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சாத்தூர் செப் - 21- தமிழக பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியையும் ஒரு முதன்மை பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேந்திரிய இந்திய சமிதியின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழகங்களுக்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக மான்யகுழுவிற்கு தமிழக முதல்அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.  இதற்கு தமிழக கட்சிகளும், பொது அமைப்புகளும் பலத்த கண்டனத்தை தெரிவித்தன இந்த சுற்றறிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எப்போதும் போல் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் அல்லது இதரமொழிகள் முதல் பகுதியாகவும், சம்பந்தப்பட்ட பாடபிரிவுகள் மூன்றாவது பகுதியாகவும் இருக்கவேண்டும் என மத்திய அரசை தமிழக முதல் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.  இதனையடுத்து அந்த சுற்றறிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. எப்போதும் போல் பழைய நடைமுறையை தமிழக பல்கலைக்கழகங்கள் பின்பற்றலாம் என அறிவித்தது.
 மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து சாத்தூர் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
 இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் இனமொழியை காப்பதில் முன்னிலையில் உள்ளார். இந்தி திணிப்பு என்றாலும், தமிழ்மொழிக்கு ஒரு ஆபத்து என்றாலும், தமிழினத்துக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதன் முதலில் குரல் கொடுப்பதுடன் அதற்கான நடவடிக்கையிலும் முதல் அமைச்சர் இறங்கிவிடுகிறார்.  எனவே தான் மத்திய அரசு தானாக இறங்கி வந்து பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பை கைவிட்டது.  இது முதல்அமைச்சர் அம்மாவுக்கு கிடைத்த வெற்றியாகும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago