முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.5 லட்சம் வசூல் செய்த படகோட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப்.22 - காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி தவித்த குடும்பத்தினரை மீட்க ரூ.1.5லட்சம் பணத்தை படகோட்டி ஒருவர் வசூலித்துள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணத மழை மற்றும் வெள்ளத்தில் சுமார் 277 பேர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து தவித்து வருகின்றனர். இராணுவத்தினர் இரவும், பகலும் அயராது மீட்பு பணியில் ஈடுபட்டு 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி தவித்த குடும்பத்தினரை மீட்க படகோட்டி ஒருவர் ரூ.1.5 லட்சம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நீதிபதி ரஷீத் அலியிடம் வெள்ளத்தில் இருந்த தப்பிய வாலிபர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த 16ம் தேதி முதல் எங்களுடைய குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வீட்டில் சிக்கி கொண்டோம். வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் எங்களால் வெளியே தப்ப முடியவில்லை. மேலும், உணவும் தண்ணீரும்கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தால் ஏரி வழியாக படகோட்டி ஒருவர் வருவதை பார்த்தோம். மாடியின் இரண்டாவது தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக கூச்சலிட்டு அவரை எங்களை காப்பாற்றும் படி கோரினோம். அங்கு வந்த படகோட்டி எங்களை மீட்டு செல்ல ரூ.1.5லட்சம் கேட்டார். வேறு வழியில்லாமல் அதனை கொடுத்து எங்கள் குடும்பத்தினரை பத்திரமான பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தோம் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்