முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம்களுக்கு ஆதரவாக மோடி பேச்சு: மாயாவதி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, செப் 22:

அரசியல் ஆதாயத்துக்காகவே பிரதமர் நரேந்திர மோடி முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காகவே வாழ்கின்றனர் என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். இது தொடர்பாக மாயாவதி லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து மோடி பேசி வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவரது கட்சியின் நடவடிக்கைக்கு இது பொருந்தவில்லை. இந்த கருத்தை மோடி அரசியல் ஆதாயத்துக்காகவே தெரிவித்துள்ளார். மதவாதத்தை பரப்புவதாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் அவர்களின் கொள்கைகள் வலுப்பெற்றுள்ளன. முஸ்லீம்களுக்கு ஆதரவாக மோடி பேசி வரும் நிலையில் அவர் சார்ந்த கட்சியின் இளைஞர் அமைப்பினர் சமூகத்தில் வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பேசி வருகின்றனர் என்றார் மாயாவதி. அமெரிக்காவை மகிழ்வித்து அதன் மூலம் தன் மீதான மதவாத தோற்றத்தை மாற்றி கொள்வதற்காக முஸ்லீம்களுக்கு ஆதரவாக மோடி பேசியுள்ளார் என்று சமாஜ்வாடி கட்சியை  சேர்ந்த உத்தரபிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராம்கோவிந்த் சௌத்ரி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் பலியாவில் அவர் கூறுகையில், முஸ்லீம்கள் தொடர்பான மனநிலையை மோடி மாற்றி கொள்ள வேண்டும் என்று எங்கள் கட்சி தலைவர் முலாயம் சிங் தெரிவித்து வருகிறார். அதை தற்போது மோடி ஏற்று கொண்டு இவ்வாறு கூறியுள்ளார். தனது கருத்தை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகளும் ஏற்று கொள்ள வேண்டும் என்று மோடி வலியுறுத்த வேண்டும். முஸ்லீம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்று முலாயம்சிங் ஏற்கனவே தெரிவித்ததையே தற்போது மோடி  கூறியுள்ளார். அமெரிக்காவை மகிழ்வித்து தன் மீதான மதவாத தோற்றத்தை மாற்றி கொள்வதற்காக மோடி முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த கருத்தை நிர்பந்தத்தின் காரணமாக அவர் வெளியிட்டுள்ளார். அப்படி இருந்தும் அவரது தோற்றத்தை மாற்ற இயலாது என்றார் ராம்கோவிந்த் சௌத்ரி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago