முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

கொச்சி, செப் 22 - கேரள மாநிலத்தில் 418 மதுக்கூடங்களை மூடும் அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுக்கூட உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் சங்கரன், ராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கேரள அரசு அறிவித்துள்ள புதிய உற்பத்தி வரி கொள்கையின்படி இந்த மனு அவசியமில்லாத ஒன்றாகி விட்டது. புதிய உற்பத்தி வரி கொள்கையை எதிர்த்து ஒற்றை நீதிபதி விசாரணையின் கீழ் வழக்கு தொடுக்கலாம் என்றனர். இதையடுத்து புதிய உற்பத்தி வரி கொள்கையை எதிர்த்து மதுக்கூட உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி சுரேந்திர மோகன்  விசாரித்து வருகிறார். முன்னதாக மதுக்கூட உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், 5 நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் இயங்கும் ஓட்டல்களில் உள்ள 700 மதுக்கூடங்ளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசின் பாரபட்சமான சட்டவிரோதமான முடிவு என்றார். மதுக்கூடங்களை மூட வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வரும் 30ம் தேதிக்குள் விசாரிக்குமாறு கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் 1 6ம் தேதிக்குள் பதிலளி்க்குமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கேரள அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் கேரள மாநிலத்தை முழு மதுவிலக்கு மாநிலமாக அடுத்த 10 ஆண்டுகளில் மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மதுவின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்