முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய மார்க்கெட்டில் தீவிரவாதிகள் சுட்டதில் 23 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லாகோஸ், செப் 22:

நைஜீரியாவில் மார்க்கெட்டில் புகுந்து தீவிரவாதிகள் சுட்டதில் 23 பேரும், பதிலுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ தாக்குதலில் 13 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் போகோஹாரம் என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். வடகிழக்கு நைஜீரியாவில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்பகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மைனோக் என்ற நகருக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். அங்கு நகரின் மைய பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. உடனே மக்கள் மீது தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் பதிலுக்கு சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும்  இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. எனவே அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலியாகினர். அவர்களில் 23 பேர் பொதுமக்கள். மீதமுள்ள 13 பேர் தீவிரவாதிகள் ஆவர். தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த வடக்கு பகுதியில் உள்ள போர்னோ, யோப் அத்மாலா ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டு முதல் அதிபர் குட்லக் ஜோனாதன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்