முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் முதியோர் பென்சன் தொகை ரூ.1000-மாக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப் 22:

ஆந்திராவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ. 200ம், ஊனமுற்றோருக்கு ரூ. 500ம் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் பென்சன் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று சந்திரபாபு நாயுடு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி தெலுங்குதேசம் ஆட்சியை பிடித்து சந்திரபாபு நாயுடு முதல்வரானார். தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி ரூ. ஆயிரம் பென்சன் தொகை உயர்வு அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பென்சன் தொகை வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். பென்சன் தொகை வழங்குவது குறித்து நேற்று முன்தினம் அவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் சுய உதவி குழு சங்கங்கள், மாவட்ட, மண்டல, கிராம அலுவலக குழு மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பென்சன் வழங்குவதற்கான நெறிமுறைகளை எடுத்து கூறினார். மாநிலத்தில் தகுதி மீறி பென்சன் வழங்கப்படுவதால் அரசுக்கு ரூ. 4500 கோடி பணம் செலவாகிறது. இது முறைப்படுத்தப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பென்சன் வழங்கப்படும். இன்னொருவர் பென்சன் பெற  தகுதி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பென்சன் வழங்குவது குறித்து அதற்காக நியமிக்கப்படும் குழு முடிவு செய்யும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே பென்சன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்