முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள சினிமாவில் நடிக்கும் முன்னாள் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், செப் 22:

கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் கேரள அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அச்சுதானந்தனை மலையாள சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர் சினிமாவில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மலையாள டைரக்டர் உஸ்மான், டைரக்டு செய்யும் அட் ஒன்ஸ் என்ற புதிய மலையாள படத்தில் அச்சுதானந்தன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் அச்சுதானந்தன் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் அச்சுதானந்தானாகவே தோன்றுகிறார். பல பிரச்சினைகளில் சிக்கி அதில்இருந்து வெளியேற வழி தெரியாமல் தவிக்கும் இளைஞர் பட்டாளத்திற்கு அவர் அறிவுரை வழங்கி வழிகாட்டுவது போல் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்சுதானந்தனின் மகன் அருண்குமார் மூலமே படத்தில் நடிக்க அச்சுதானந்தனின் சம்மதத்தை டைரக்டர்  உஸ்மான் பெற்றுள்ளார். அட் ஒன்ஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளதாகவும் டைரக்டர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்