முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

+2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப் 22 - மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும்.மாணவர்கள் காப்பி அடிப் பதை தடுக்கும் வகையில் இப்பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்களில் ‘ஜம்ப்ளிங்’ என்ற முறை கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறையில், எல்லா வினாக்களும் ஒன்று தான் என்றாலும், அவை மாறி மாறி இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட ஒரு வினா, ஒரு மாணவ ருக்கு 7-வதாகவும் இன்னொரு வருக்கு 20-வது இடத்திலும் இருக்கலாம். கேள்விகள் இடம் மாறி இருப்பதால் மாணவர்கள் காப்பி அடிக்க இயலாது. ‘ஜம்ப்ளிங்’ முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினா தொகுப்புகள் அச்சிடப்பட்டன.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வின்போது, விடைத்தாளில் ரகசிய குறியீடு (பார்கோடு), மாணவரின் பதிவு எண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக் கும் தனித்தனி வினா கட்டு என தேர்வுத்துறை பல புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தியது. அதனால், ஜம்ப்ளிங் முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினாக்கள் வழங்கும் முறை கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப் பட்டது.

இதற்கிடையே, ஒருசில இடங்களில் அறிவியல், கணிததேர்வுகளின்போது ஒரு மதிப்பெண் வினாக்களை சில மாணவர்கள் காப்பி அடித்த தாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஏற்கெனவே இருந்ததைப்போல பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங் கியல், கணிதம் ஆகிய 6 பாடங்களில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மீண்டும் ஜம்ப்ளிங் முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.இந்த மாதம் நடக்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வில் இருந்தே இந்த முறையை நடைமுறைப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட் டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago