முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

அமதாபாத், செப்.22 - குஜராத்தில் 2012-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது, தமது வேட்புமனுவில் திருமணம் விவரத்தை பிரதமர் மோடி மறைத்ததாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும் மனு மீதான விசாரணையை அமதாபாத் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது தொடர்பான வழக்கு ஆமதாபாத் கூடூதல் அமர்வு நீதிபதி ராணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது. அடுத்த மாதம் 1-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து் நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டதைக் காரணம் காட்டி, இது குறித்து மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி யின் சார்பில் அமதாபாத் கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, மனுவுக்குப் பதிலளிக்க அரசு வழ்ககுறைஞர் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து நீதிபதி இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிஷாந்த் வர்மா அண்மையில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. முன்னதாக நிஷாந்த் வர்மாவின் மனுவைத் தள்ளுபடி செய்தபோதிலும், மோடி தனது திருமண விவரத்தை வேட்பு மனுவில் இணைக்காதது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 பிரிவு வின்படி அவர் குற்றம் புரிந்ததாகக் கருதப்படக் கூடியது என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்திருந்தார்.

இது போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மக்கள் பிரதிநித்ததுவச் சட்டத்தின்படி, 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்