முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் பதிலடி: பாக்., திட்டம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப் 23 - அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகினால் கடல் பகுதியில் இருந்து அணுகுண்டுகள் தாங்கிய சிறிய ரக ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ் நாளிதழில் வெளியான செய்தியில், பாகிஸ்தானின் நிலப்பரப்பில் அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மையங்கள் அனைத்தும் அணுகுண்டு தாக்குதலுக்கு ஆளாகி முற்றிலும் அழிய நேரிட்டாலும் அதற்கு பதிலடி தரும் வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு உருவாக்கி உள்ளது. அந்த திட்டத்தின்படி அந்நாட்டு போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து அணுகுண்டுகளை ஏந்தி சென்று குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அநேகமாக இந்த திட்டம் அடுத்த ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாதுகாப்பு உயர்கல்வி துறை நிறுவன முன்னாள் இயக்குனரும், அணுசக்தி விஞ்ஞானியுமான ஷிரின் எம். மாஸாரி கூறியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்