முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் அதிபராகிறார் அஷ்ரப் கனி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், செப் 23:

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆப்கன் தலைமை தேர்தல் ஆணையர் அகமது யூசப் நூரிஸ் தானி வெளியி்ட்ட போதிலும் மொத்த வாக்கு எண்ணிக்கை, வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகள் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது முறைகேடுகள் நடந்ததாக பிரதான வேட்பாளர்களான அஷ்ரப் கனியும் அப்துல்லா அப்துல்லாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தனர். இதை தொடர்ந்து ஐ.நா. மேற்பார்வையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் முடிவு வெளியாக கூடிய நிலையில் அஷ்ரப் கனி, அப்துல்லா அப்துல்லா இடையே காலையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அஷ்ரப் கனி அதிபராக பொறுப்பேற்பார் என முடிவானது. இந்த உடன்படிக்கையின் படி தலைமை செயல் அதிகாரி போன்றதொரு புதிய பதவி உருபாக்கப்படவிருக்கிறது. இது பிரதமர் பதவிக்கு நிகரானது. இதற்கான வேட்பாளரை அப்துல்லா அப்துல்லா நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் இப்பதவிக்கு அவரது பெயரே முன்மொழியப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவு வெளியானது. உடன்படிக்கை வெளியானதும் தற்போதைய அதிபர் ஹமீத் கர்ஸாய் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதிபர் பதவி தொடர்பான உடன்படிக்கையை அமெரிக்காவும் பாகிஸ்தானும் வரவேற்றுள்ளனர். தேர்தல் தொடர்பாக சர்ச்சை எழுந்தது முதல் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேசிய அரசை அமைக்க வேண்டும் என ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளது என ஐ.நா. கவலை தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago