முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 6 லட்சம் அபராதம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப் 23:

கடைசி நேரத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை வாபஸ் பெற்றதால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் 17வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதாக இருந்த இந்திய ரக்பி ஆடவர் அணியும், மற்றொரு அணியும் கடைசி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. இதற்காகத்தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவரும், ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவருமான அட்லீ சுமரி வாலாவிடம் கேட்ட போது, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அபராதம் குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நீங்கள் இது குறித்து அனில் கண்ணாவிடம் கேளுங்கள் என்றார். இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கன்னா கூறுகையில், அபராத முடிவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். இது சிறிய விஷயம். ஏன் இதை பெரிதாக்குகின்றனர் என தெரியவில்லை என்றார். ஆசிய போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்த பின் கால தாமதமாகவே மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதிலும் ஐஓசி பரிந்துரைத்த அனைத்து வீரர்களும் இடம்பெறவில்லை. தாமதமாக அணியை அறிவித்தது ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்