முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, செப் 23:

சிங்கப்பூரில் இருந்து காலணிகளுக்குள் பதுக்கி கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்த சிங்கப்பூரை சேர்ந்த கேரியர் முகவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் கடந்த  சனிக்கிழமையன்று திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். இதில் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பயணி தனது காலணிக்குள் ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ஒரு காலணிக்குள் 6 கட்டிகள் என இரு காலணிகளிலும் மொத்தம் 12 தங்க கட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடையில் மொத்தம் 1200 கிராம் எடையுடன் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ. 34 லட்சமாகும். இதை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தங்கத்தை யார் கொடுத்தது? யாரிடம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை கைதான நபர் தெரிவிக்கவில்லை. சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்த தமிழ்செல்வன் வியாபார நோக்கில் தங்கத்தை கொண்டு வந்து கொடுக்கும் கேரியர் ஏஜெண்ட் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சுற்றுலா விசாவில் தமிழகம் வந்துள்ள அவர் மேலும் தகவல்களை கூள மறுத்துள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்