முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி வெற்றி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், செப்.23 - மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் இறுதிகட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 2 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ள நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2.46 மணிக்கு இந்த பணியை இஸ்ரோ மேற்கொண்டது. 4 நொடிகளுக்கு இந்த சீரமைப்புப் பணி நடைபெற்றது.

இதேபோல், கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், (மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் ) தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்