முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘‘அம்மா உணவகத்தை" முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.23 – சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உடனிருப்போர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘‘அம்மா உணவகத்தை" குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும், இந்த விழாவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பயனாளிகளுக்கு தன் கைப்பட உணவு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் அங்கு ஒரு பிளேட் எடுத்து அதில் சாதங்களை தன்கைப்பட எடுத்து வைத்து ருசி பார்த்து பாராட்டு தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா தன் கைப்பட பயனாளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உணவு பரிமாறினார்.

பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.

அமைச்சர்களும்

ருசி பார்த்தனர்

முதலமைச்சர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றதும் அனைத்து அமைச்சர்களும் அம்மா உணவகத்தில் உள்ள உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார்கள். மேயர் சைதை துரைசாமி மற்றும் அதிகாரிகளும் உணவை ருசி பார்த்தனர்.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும், அவர்களுக்கு துணைக்கு வந்தவர்களும் உணவை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிட்டார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்ல குழந்தையான அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, மோகன், பா.வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்கள்" முதலமைச்சர் ஜெயலலிதாவால் 19.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் குறித்து செய்தி அறிந்து, இந்தத் திட்டத்தினை தாங்களும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, சிறப்பாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினை பாராட்டியுள்ளனர்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை" முதலமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார். மேலும், இந்த விழாவில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், , சென்னை மாநகராட்சி முதன்மைச் செயலாளர் ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி.கலைராஜன், ஜி.செந்தமிழன், ஜே.சி.டி.பிரபாகர், என்.ஆர்.சிவபதி, வாலாஜாபாத் கணேசன், கே.பி.கந்தன், கே.குப்பன், எம்.கே.அசோக், மொளச்சூர் பெருமாள், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி, ஜெயவர்த்தன் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், அமைப்பு செயலாளர் ஆதிராசாராம், துணை மேயர் பெஞ்சமின்,மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ.பழனி, மாணவர் அணி செயலாளர் ராமலிங்கம், பகுதி செயலாளர்கள் நுங்கை மாறன், ஏ.இ.வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வேளாங்கண்ணி, கவுன்சிலர்கள் பி.சின்னையன், டி.சிவராஜ், அமீர்பாட்சா, மோகன், வீடியோ சரவணன், வடசென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எம்.இஸ்மாயின் கனி, தி.நகர் கருணாகரன், மயிலை ராஜேஷ்கண்ணா உட்பட ஏராளமானபேர் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை உற்சாகமாக வரவேற்றார்கள்.

முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவமனை நுழைவு வாயிலில் பிரமாண்ட வரவேற்பு வளைவு மற்றும் ஏராளமான பேனர்கள் அனைவரையும் கவரும் வகையில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழிநெடுக தொண்டர்களும்,பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சியுடன் முதலமைச்சரை வரவேற்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago