முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை செப். 23 – முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையிலிருந்து நேற்று பாசனத்திற்கு தண்ணீரை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து விட்டார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து நேற்று காலை 9.30 மணியளவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமையில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து விட்டார்.

விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையா, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுச்சாமி, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜன், கூடுதல், முதன்மை தலைமை வன பாதுகாவலர் முனைவர் ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் நா.குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன், செயற்பொறியாளர் தியாகராஜன், எம்.குழந்தைசாமி, உதவி செயற்பொறியாளர் பொ.முத்துச்சாமி, திரு.க.சண்முகம், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலங்கியம், தளவாய்பட்டினம், தாராபுரம், கொளிஞ்சிவாடி, நஞ்சத்தழையூர், சுண்டக்காம்பாளையம் ஆகிய வாய்க்கால்களின் வழியாக 8416 ஏக்கர் நிலங்களுக்கும், கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தாராபுரம், நஞ்சங்காலக்குறிச்சி, வலதுகரை வாய்க்கால் மற்றும் இடதுவரை வாய்க்கால்களின் வழியாக 13451 ஏக்கர் நிலங்களுக்கும் ஆற்று மதகு மூலம் 120 நாட்களுக்கு தகுந்த இடைவௌிவிட்டு 4752 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

புதிய பாசனத்திற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள 25250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் மூலம் 120 நாட்களுக்கு தகுந்த இடைவெளி விட்டு 2597.17 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்