முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மேயர் தேர்தல்: அந்தோணி கிரேசி வெற்றி

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி.செப்.23 - தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அந்தோணி கிரேசி 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி 31,708 பெற்று தோல்வியடைந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. இதில் அ.தி.மு.க சார்பில் அந்தோணி கிரேசி, பா.ஜ.க சார்பில் ஜெயலட்சுமி மற்றும் சுயேட்சைகள் உட்பட 7பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் மதுமதி முன்னிலையில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். மொத்தம் 10 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையடுத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க வேட்பாளர் அந்தோணி கிரேசி 84,885 வா்ககுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி 31,708 வாக்குகள் பெற்றுள்ளார்

வாக்கு எண்ணிக்கை விபரம்  அந்தோணி கிரேசி (அதிமுக) 1,16,593 ,ஜெயலட்சுமி (பாஜக) 31,708 முகம்மது பாத்திமா (சுயே.)2,059,எஸ்கலின் (சுயே.) 1,048,செண்பகவடிவு (சுயே.)668,சாந்தி (சுயே.)533,வளர்மதி (சுயே.)443,பதிவான வாக்குகள் 152507,தபால் ஓட்டுக்கள் (மொத்தம் 46 - செல்லாதவை 36) = 10

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்