முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் பணம் பறிக்க முயன்ற போலி அதிகாரி கைது

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 24:

மதுரையில் மாநகராட்சி அதிகாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவனை சந்திக்க சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் டிப்டாப்பாக வந்தார். தான் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரி எனவும், மத்திய அரசு வழங்கும் நிதியை தான் கண்காணிக்க வந்ததாகவும், இது குறித்த விவரங்களை உடனடியாக தான் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு வரும்படி கூறினார். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கலந்து பேசினார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் மதுரத்தை அந்த வாலிபர் தொடர்பு கொண்டார். அப்போது மதுரை மாநகராட்சிக்கு மத்திய அரசு மூலம் வழங்கிய நிதியில் மோசடி நடந்துள்ளது. அதில் நீங்கள் முக்கிய தொடர்புள்ளவராக உள்ளீர்கள். எனவே இதனை மறைக்க வேண்டுமானால் ரூ. ஒரு லட்சத்துடன் தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இந்த விபரங்களை தலைமை பொறியாளர் மதுரம் மாநகராட்சி கமிஷனர் கதிரவனிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக இது குறித்து போலீசில் புகார் கொடுக்கும்படி கூறினார். அதன்படி மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு அந்த நபர் தங்கியுள்ள குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த லலித் கொடலியா(35) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரிடம் சிபிஐ மற்றும் மத்திய அரசின் பல துறைகளில் உள்ள உயர் பதவி அதிகாரிக்கான போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மத்திய அரசு அதிகாரி போல் போலியாக நடித்து பணம் பறிக்க முயன்ற லலித் கொடலியாவை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago