முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை கோபுர நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் மோடி

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், செப் 24:

இம்மாதம் 26ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா போராடும் என்பதை அந்நாட்டுக்கு உறுதிபட தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மோடி மரியாதை செலுத்துகிறார். மேலும் ஆப்ரகாம் லிங்கன் நினைவிடம், மார்ட்டின் லூதர்கிங் நினைவிடம் ஆகியவற்றுக்கு மோடி செல்லவுள்ளார். வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி இந்திய பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் முன்னிலையில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 26ம் தேதி பிற்பகல் நியூயார்க் சென்றடையும் மோடி மன்ஹாட்டனில் உள்ள பேலஸ் ஓட்டலில் தங்குகிறார். அடுத்த நாள் ஐ.நா பொதுச்சபையில் பேசுகிறார். அப்போது வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவை அவர் சந்திக்கிறார். 28ம் தேதி அவர் மேடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்திக்கிறார். அதை தொடர்ந்து 29ம் தேதி வாஷிங்டன் வரும் அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறகு முதன் முறையாக அமெரிக்காவின் விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுஸில் தங்குகிறார். 190 ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க இந்த மாளிகை வெள்ளை மாளிகை அருகே பென்சி ல்வேனியா அவென்யூ என்ற பகுதியில் அமைந்துள்ளது. அன்று அதிபர் ஒபாமாவுடன் விருந்தில் பங்கேற்கிறார் மோடி. எனினும் நவராத்திரி விழாவையொட்டி மோடி விரதம் இருப்பதால் எலுமிச்சை சாறு மற்றும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்