முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப் 24:

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் குஜராத் மாநில அரசு கையெழுத்திட்டது. அப்போது வழங்கப்பட்ட வரைபடத்தில் இந்திய பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கூறியுள்ளார்.

கடந்த 17ம் தேதி சீன அதிபர் ஜீ ஜின்பிங் குஜராத் வந்திருந்தார். அப்போது குஜராத் மாநில அரசிற்கும், சீனாவில் உள்ள குவாண்டாங் பகுதிக்கும் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்ச்சியின் போது ஒரு வரைபடத்தை குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலாளர் டி. பாண்டியன் வழங்கினார். வரைபடத்தில் அருணாசல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகள் இருந்தன. ஆனால் இவை தொடர்ச்சியான கோடுகளால் வரையப்படாமல் இடைவெளியுடன் கூடிய கோடுகளால் இருந்தது. இதன் மூலம் அந்த பகுதிகள் விவாதத்திற்குரிய பகுதிகள் என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. வரைபடம் வழங்கப்பட்ட போது பிரதமர் மோடியும் அங்கு இருந்தார். ஆகவே தவறுக்கு அவரும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் தன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட வரைபடங்கள் சீனாவில் உள்ள குவாண்டாங் பகுதி மற்றும் குவாங்ஜோ நகரத்தின் அமைப்பை விளக்கும் நோக்கில் வெளியிடப்பட்டன. அந்த வரைபடத்தில் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் யாரும் கையெழுத்திடவில்லை. குஜராத் அரசின் சார்பாக வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படவில்லை. அந்த வரைபடத்தில் ஒவ்வொரு பகுதியும் எங்கு அமைந்துள்ளது என்ற விவரம் உள்ளது. பகுதியின் பரப்பளவு, மக்கள் தொகை, தனி நபர் வருமானம் போன்ற விவரங்களே இடம் பெற்றுள்ளன. அந்த வரைபடம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல. இவ்வாறு குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்