முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேனகாவை விமர்சித்த பாஜக எம்பி வீட்டின் மீது கல்வீச்சு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, செப் 24:

மேனகா காந்தியை விமர்சித்த பாஜக எம்பி வீட்டின் மீது வருண்காந்தி ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

உ.பி. மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது உ.பி. சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதால் இம்மாநிலத்தில் பாஜக கட்சியின் தலைமை பொறுப்பை தன் மகன் வருண்காந்தியிடம் ஒப்படைத்து விடலாம் என்று மேனகா காந்தி கூறியிருந்தார். இது போன்ற கருத்துக்களை இதற்கு முன்னரும் மேனகா காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யின் வீட்டின் மீது நேற்று முன்தினம் கல்வீச்சு சம்பவம் நடந்தது. மேனகா காந்தியின் மகன் வருண்காந்தி சுல்தான்பூர் தொகுதியில் பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய ஆதரவாளர்கள் அலகாபாத் தொகுதி பா.ஜ.க. எம்.பி. சியாமா சரண்குப்தா வீட்டின் மீது நேற்று முன்தினம் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேனகா காந்தி தன் மகன் வருண்காந்தியை உ.பி. மாநில முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார் என்று எம்.பி. சியாமா சரண்குப்தா விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் வருண்காந்தியின் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து அலகாபாத் எம்.பி. சியாமா சரண்குப்தா வீட்டின் மீது கல்வீசினர் என்று தெரியவந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்