முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகனங்கள் சோதனை: ரூ.5லட்சத்து 14 ஆயிரம் அபராதம்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.24 - மதுரையில் வட்டார போக்குவரத்துஅலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் நேற்று ஒரே நாளில் ரூ. 5லட்சத்து 14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்தின் உத்தரவின் பேரில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கே.கல்யாண்குமார்(வடக்கு) பாஸ்கரன் (மையம்) எம்.சிங்காரவேலு(தெற்கு) மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாரிப்பாண்டி, ஆனந்தகுமார், மணிமாறன், ராஜ்குமார், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வாகன சோதனை மேற்கொண்டதில் 2618 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் 406 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. 46 ஆட்டோ ரிக்சாக்கள், தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 27 வாகனங்கள், அனுமதி சீட்டில்லாமல் இயக்கப்பட்ட 15 வாகனங்கள் உள்பட பல்வேறு குறைகள் உள்ள வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதன் மூலம் வாகன வரியாக ரூ. 7,59,360வும், அபராதமாக ரூ.5,14,180ம் வசூலிக்கப்பட்டது.

நேற்று மாலை கோரிப்பாளையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மினி பஸ்கள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 5 மினி பஸ்களுக்கும் 12 ஆட்டோ ரிக்சாக்களுக்கும் சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. 5 ஆட்டோ ரிக்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதத்தொகையாக 7,900 வசூலிக்கப்பட்டது. மேலும், இது போன்று பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ப றிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் (மையம்) கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்