முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியப் ஸ்குவாஷ்: வெள்ளி வென்றார் சவுரவ் கோஷல்

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியோன், செப்.24 - ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியானது. இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அவர் குவைத் வீரர் அப்துல்லாவை எதிர்கொண்டார். 3-2 என்ற செட் கணக்கில் அப்துல்லா, சவுரவை எளிதில் வீழ்த்தினார்.

இதனால், ஏற்கெனவே எதிர்பார்த்தபடி சவுரவ் கோஷலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago