முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது அரசியல் வழிகாட்டி ஜெயலிலதா தான்: ரோஜா

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, செப்.25 - செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த அவர் பிரேமதவசு என்ற படத்தின் மூலம் தெலுங்கு படத்திலும் அறிமுகமானார்.

இதுவரை 105-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். சினிமா, டெலிவிஷன் ஆகியவற்றில் முத்திரை பதித்த ரோஜா அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து உள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாகவும் உள்ளார். எனது அரசியல் வழிகாட்டி தமிழக முதல்வர் தான் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த பெயர் ஸ்ரீலதா. செம்பருத்தி படத்தில் நடித்தபோது இயக்குனர் செல்வமணிதான் எனது பெயரை ரோஜா என்று மாற்றினார். என் சிரிப்பு ரோஜா இதழ் விரித்ததுபோல் இருப்பதாக கூறி அந்த பெயரை சூட்ட அனுமதி கேட்டார். நானும் சரி என்றேன். இன்று அந்த பெயர்தான் பிரபமாகி உள்ளது. நான் விமான பணிப் பெண்ணாக பணியாற்ற ஆசைப்பட்டேன். ஆனால் எனது குடும்பத்தினர் நான் டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் நான் ஹோம்சயின்ஸ் படித்தேன். பின்னர் நடிகையாகி இப்போது எம்.எல்.ஏ.வாகிவிட்டேன்.

எனது வளர்ச்சியில் அக்கறை காட்டி இந்த அளவுக்கு என்னை உயர்த்தியவர் எனது அண்ணன் குமாரசாமி ரெட்டியும், எனது கணவர் செல்வமணியும்தான். என்னை அரசியலுக்கு இழுத்தது தற்போதைய சபாநாயகர் சிவபிரசாத் ராவ்தான். அவர்தான் என்னை தேர்தல் பிரசாரத்துக்கு முதல் முறையாக அழைத்தார். அரசியல் நான் மிகவும் விரும்பக்கூடியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் அவரை பார்த்துதான் நான் அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவின் தைரியம், தன்னம்பிக்கை யாருக்கும் வராது. அரசியலில் ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக தொகுதி மக்களிடம் எப்போதும் இருக்க விரும்புகிறேன். இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago