முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் கொண்டு வந்த தங்க பிஸ்கெட்கள் பறிமுதல்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 25:சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகள் கொண்டு வந்த 9.50 கிலோ தங்க பிஸ்கெட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒரு பயணியை கைது செய்துள்ளனர்..

மேலும் இரண்டு பெண்கள், தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆகியோரிடம்போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு பல கோடி என்று கூறப்படுகிறது.

இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அதனைதொடர்ந்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையைச்சேர்ந்த சிட்டி சலி (வயது 38) என்பதும் நான் தங்கத்தை கடத்தவில்லை என்றும் கூறினார்.

அவர் கூறிய வார்த்தைகளில் சந்தேகம் வலுக்கவே அவரை தனியாக அழைத்து சென்று முறையாக விசாரணை நடத்திய போது தான் கொண்டு வந்த தங்கத்தை குடியுரிமை அதிகாரிகள் இருக்கும் இடத்தில் வைத்துள்ளேன் என்று கூறியதன் பேரில், அவரை அழைத்துசென்று குடியுரிமை பகுதியில் பார்த்தபோது ஒரு பையில் 4 கிலோ தங்க பிஸ்கெட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் சவுந்திரராஜன் மற்றும் பால்ராஜ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்மதிப்பு ரூ. 2 கோடியாகும்.

அதேபோன்று, நேற்று காலை குவைத்தில் இருந்து தனியார் விமானத்தில் சென்னை வந்த இரண்டு பெண் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் உள்ளாடைகளில் மறைத்து 5.50 கிலோ தங்க பிஸ்கெட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. அந்த தங்க பிஸ்கெட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு பல கோடியாகும்.

அந்த பெண்களிடம் தங்க பிஸ்கெட்களை கொடுத்து அனுப்பியது யார். தங்கம் கடத்தல் கும்பலுக்கும் இந்த பெண்களுக்கும் தொடர்பு ள்ளதாக என்று சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் அந்த பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்