முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

214 நிலக்கரிச் சுரங்க உரிமம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.25 - கடந்த 1993 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதேவேளையில், பொதுத்துறை நிறுவனங்களான செயில், என்.டி.பி.சி. ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட நிலக்கரிச் சுரங்க உரிமங்களும், அல்ட்ரா மெகா பவர் பிராஜக்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 2 உரிமங்களும் ரத்து செய்யப்படவில்லை. உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட 214 நிறுவனங்களுக்கும் அவை மேற்கொண்டுள்ள பணிகளை முடிப்பதற்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்காமல் இருந்ததால், அரசுக்கு ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.295 வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற மத்திய கணக்கு தணிக்கைத் துறையின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. எனவே, நிலக்கரிச் சுரங்கங்கள் இயங்காத போது ஏற்பட்ட இழப்பை அந்த நிறுவனங்களே ஈடு கட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 93 - 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

கடந்த 93, 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமத்தை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம். சுப்ரீம் கோர்ட்டு எடுக்கும் முடிவை மத்திய அரசு ஏற்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த 218 சுரங்க உரிமங்களில் 46 உரிமங்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கலாம். இந்த 46-ல் 40 சுரங்கங்கள் தற்போது நிலக்கரி உற்பத்தி செய்து வருகின்றன. 6 சுரங்கங்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ள 6 சுரங்கங்கள் குறித்த முதல் தகவல் அறிக்கை விவரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், 218 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும், 4 நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமத்தை மட்டும் ரத்து செய்யவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago