முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் சவால்கள் வியப்புக்குரியது: முதல்வருக்கு அர்னால்டு கடிதம்

புதன்கிழமை, 24 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.25 - 'ஐ' திரைப்பட பாடல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுடம் மேற்கொண்ட சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாதுகாப்பு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கியதற்காக நன்றி கூறுவதாகவும் அர்னால்டு முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்களுடன் மேற்கொண்ட சந்திப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. தமிழகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களும், நீங்கள் கடந்து வந்த பாதைகளும் எனக்கு வியப்பளிப்பதாக உள்ளன. தமிழக மக்கள் அனைவரும் உங்களை 'அம்மா' என்று அழைப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் மாநிலத்தில் உள்ள பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் வகுத்துள்ள பணிகளும் மிக சிறப்பானது.

அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற திட்டங்களை எல்லாம் நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை. மேலும், நீங்கள் ஏற்படுத்தியுள்ள காற்றாலை மின் திட்டங்கள், சுற்றுசூழல் விழிப்புணர்வு திட்டங்கள் அனைத்தும் மிகவும் பாராட்டக்கூடியவை. காற்றாலை மூலம் மின் உற்பத்தி பெறுவது சுற்றுசூழலுக்கு ஏற்ற விஷயம். அதிலும், இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 39% தமிழகத்தின் பங்கு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் 'R20' என்ற நிறுவனத்தை நான் ஏற்படுத்தினேன். காலநிலை மாற்றம் ஏற்படும் தருணத்தில் சுத்தமான ஆற்றலை உருவாக்குவதற்காக 560-க்கும் மேற்பட்ட நகரங்களையும் மாகாணங்களையும் இந்த நிறுவனத்தின் மூலம் இணைத்து சில செயல்முறைகளை கையாண்டு வருகிறோம். இந்த திட்டத்தில் தமிழகமும் பங்கேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேம். இது குறித்த விவரங்களை நான் விரைவில் உங்கள் மாநில சுற்றுசூழல் அமைச்சகத்தை தொடர்புகொண்டு பேசுகிறேன். இது ஒரு குறிப்பிட்ட மாகாணம் அல்லது மாநிலத்துக்கான வளர்ச்சி பாதை இல்லை, ஒட்டு மொத்த உலகுக்கும் வழிகாட்டும் நடைமுறை ஆகும். நான் கலிஃபோர்னியாவில் செய்ததை நீங்கள் தமிழகத்தில் செய்துள்ளீர்கள்.

இந்த திட்டத்தில் உங்கள் மாநிலமும் இணைவதன் மூலம் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. நீங்கள் உங்களது சிறப்பான பணியை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று அர்னால்டு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்