முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப் 26:

மதுரை மீனாட்சி அம்மன், இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி 2ம் பிரகாரத்தில் கொலு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கொலுவில் 16 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரை மங்களம் என்ற பொருளில் 63 நாயன்மார்களும், இதையடுத்து நடராஜர், மீனாட்சி சன்னதி, திருக்கல்யாணம், மீனாட்சி ஊஞ்சல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து ஜெயமங்கலம் என்ற பொருளிலும், சுபமங்களம் என்ற பொருளிலும், மீனாட்சி சீர்வரிசை, பொற்றாமரை குளம், தேரோட்டம் போன்றவையும் இடம் பெற்றுள்ளது. இந்த நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இன்னிசை, பரத நாட்டியம், சொற்பொழிவு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இன்று காலை மாணவி ராஜேஸ்வரியின் பரதநாட்டியமும், இரவில் நடிகை அம்மு ராமச்சந்திரனின் பரதநாட்டியமும் நடைபெறுகிறது. வெள்ளிக் கிழமை அம்மன் ஊஞ்சல் அலங்காரமும், பக்தி மற்றும் தேவார இன்னிசையும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும், சனிக்கிழமை அம்மன் சயன திருக்கோலத்தில் காட்சி  அளிக்கிறார். அன்று ஆன்மீக சொற்பொழிவு, கர்நாடக சங்கீதம், பக்தி மெல்லிசை நடைபெறுகிறது. ஞாயிற்றுக் கிழமை அன்று முருகனுக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை பரதநாட்டியமும், இரவில் ஆன்மீக சொற்பொழிவும், திங்கட்கிழமையன்று அம்மன் கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். அன்று காலை மற்றும் இரவில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதே போல் செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் திருமண கோலத்திலும், புதன்கிழமை மஹிஷாசுர மாத்தினி  அலங்காரத்திலும் வியாழக்கிழமையன்று ஆன்மீக சொற்பொழிவும், வெள்ளிக்கிழமையன்று விஜயதசமியும், அன்று மாலை வீணை வழிபாடும் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆலோசனையின்படி இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதே போல் இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்