முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் மைசூர் தசரா விழா தொடக்கம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

பெங்களூர், செப்.26 - கர்நாடகாவில் மைசூர் தசரா விழா நேற்று காலை தொடங்கியது. ஞானபீடவிருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், சாமூண்டீஸ்வரி தேவிக்கு சிறப்பு பூஜை நடத்தி விழாவை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலத்தில் வரலாற்று சிறப்புமிக்க மைசூர் தசரா விழா நேற்று தொடங்கியது. சாமூண்டி மலையில் அமைந்துள்ள ஸ்ரீசாமூண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார் ஞானபீட் விருது பெற்ற எழுத்தாளர் கிரிஷ்கர்னாட். இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் சீவிவாசபிரசாத், மகாதேவபிரசாத், ஜெயசந்திரா, பிரதாப் சிம்ஹா, மாவட்ட கலெக்டர் ஷீகா, மாநகர மேயர் ராஜேஸ்வரி உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மைசூரில் உள்ள கலை மன்றம், அரண்மனை வளாகம், பண்ணிமண்டபம், மானிசவளாகம் உள்பட பல அரங்குகளில் தினமும் காலை மற்ரும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள், சங்கீதம் , பரதம், நாட்டுபுற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களான கே.ஆர்.எஸ்., பால்மூரி, ரங்கனதிட்டு, நஞ்சன்கூடு, மேல்கோட்டை, பி.ஆர்.ஹில்ஸ் போன்ற பகுதிகளிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தசரா விழாவை முன்னிட்டு மாநகரம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள், கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், முக்கிய வளைவுகள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனியார் நட்சத்திர ஓட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. விழாவின் இறுதி நாளான வரும் அக்.4-ஆம் தேதி கண்ணை வகரும் தங்க அம்பாரி ஊர்வலம் நடக்கிறது. அதில் கவர்னர் வஜு பாய்ருடாபாய் வாலா உள்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

யதுவம்சத்தை சேர்ந்த கடைசி மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் கடந்தாண்டு மாரடைப்பால் காலமானதால், மன்னர் குடும்பத்தின் சார்பில் நடத்தப்படும் தனியார் தர்பார் உள்பட பல நிகழ்வுகள் இவ்வாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago