முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப் 27 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 450 உற்சவங்களுக்கு மேல் நடைபெறுகிறது. இதில் பிரம்ம தேவனால் நடத்தப்படுவதாக கருதப்படும் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 9 நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, தச அவதாரங்களில் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் இரவில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்தாண்டு பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை 3.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் மகாவிஷ்ணுவின் வாகனமான கருட உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடி ஆகியவை மேளதாளம் முழங்க நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 5.36 மணியில் இருந்து மீன லக்னத்தில் தேவர்களையும், தேவதைகளையும் பிரம்மோற்சவத்தை காண அழைக்கும் வகையில் உற்சவர் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கருட உருவம் வரையப்பட்ட கொடியுடன் இணைக்கப்பட்டு கோயிலுக்குள் உள்ள தங்க கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

இதையடுத்து இரவு 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணன் அவதாரத்தில் வலம் வருகிறார். பிரம்மோற்சவத்திற்காக மாநில அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தார். பின்னர் திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து கோயிலுக்குள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். பிரம்மோற்சவத்தையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருப்பதி மற்றும் திருமலையில் சுவாமியின் அவதாரங்களை விளக்கும் வண்ண மின்விளக்குகளும் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்