முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எண்ணெய் & எரிவாயு நிறுவனங்களின் பொருட்காட்சி

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 27 – இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஃப்ஷோர் எண்ணெய் & எரிவாயு சந்தை மற்றும் அதன் ஆதரவுத் துறைகளுக்கான பொருட்காட்சியான ஓஎஸ்இஏ 2014 தனது பிளாட்டினம் பவள விழா எடிஷனை 2014 டிசம்பர் 2 முதல் 5 வரை சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸில் கொண்டாட உள்ளது. இதில் விண்ட்லாஸ் எஞ்சினியர்ஸ் & சர்வீசஸ், ரொடெக்ஸ் மேனுஃபாக்சரர்ரஸ் & எஞ்சினினர்ஸ், சன்கவ் எஞ்சினியரிங்க், ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எண்ணெய் & இயற்கை எரிவாயு கார்பொரேஷன் (ஒஎன்ஜிசி), மார்கெட்ஸ் & மார்க்கெட்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.

விண்ட்லாஸ் எஞ்சினியர்ஸ் & சர்வீசஸ், ரொடெக்ஸ் மேனுஃபாக்சர்ர்ரஸ் & எஞ்சினினர்ஸ், சன்கவ் எஞ்சினியரிங்க் ஆகிய நிறுவனங்கள் எண்ணெய்த் துறைக்கான கருவிகள், , நீர்ம வடிகட்டிகள், பிரிக்கும் கருவிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும். ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எண்ணெய் & இயற்கை எரிவாயு கார்பொரேஷன் (ஒஎன்ஜிசி), மற்றும் ஆய்வு நிறுவனமான மார்கெட்ஸ் & மார்க்கெட்ஸ் ஆகியவை ஒஎஸ்இஏ 2014 பொருட்காட்சியில் பங்கேற்பதுடன், பன்னாட்டுக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு மரபுசாரா மற்றும் ஆழ்நீர் சுற்றுச்சூழல்களில் புதிய தொழில்நுட்பங்கள், ஆழ்நீர் ஓட்ட உத்தரவாதம் குறித்த போக்குகள், ஆசியாவிற்கான எல்என்ஜியின் எதிர்கால பங்களிப்பு ஆகியவற்றில் இந்தியாவின் கருத்துக்களையும், நிலைப்பாட்டையும் வழங்கும்.

முந்தைய 2012 ஓஎஸ்இஏ பொருட்காட்சியில் இந்தியாவிலிருந்து ஆர்யா ஆஃப்ஷோர் சர்வீசஸ், செலிகம் எண்ணெய் & எரிவாயு இந்தியா, ஜி & டி ஆயில் ஸ்டேட் இண்டஸ்ட்ரீஸ், உள்ளிட்ட 150க்கும் அதிகமான பிரதிநிதிகள் நிறுவனங்களின் சார்பாகக் கலந்து கொண்டனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்