முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

விழுப்புரம் -செப்-26
 தமிழக முதல்வர் ஜெயலலிதவை அவதூறக பேசியதாக விஐயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த மாதம் நவம்பர்; 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவுயிட்டார்.
    விழுப்புரத்தில் கடந்த 30.08.2012ம் தேதி தே.மு.தி.க சார்பில் அதன் தலைவரும் தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்;கூட்டத்தில் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, அவதூறாக பேசினார் இதனால் விஜயகாந்த  மீது  நடவடிக்கை  எடுக்ககோரி  விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  அரசு வழக்கறிஞர் பொன்சிவா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது  கோர்ட்டில்  ஆஜராவதில் இருந்து விஜயகாந்துக்கு  விலக்கு  அளிக்கக்கோரி  சென்னை ஐகோர்ட்டில் தே.மு.தி.க வழக்கறிஞர்கள்  மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு கடந்த 18.11.2013 அன்று ஐகோர்ட்டில் விசாணைக்கு வந்தபோது. விழுப்புரம் கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது.
 இந்த நிலையில் விழுப்புரம் கோர்ட்டில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சரோஜினி முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது விஜயகாந்த் ஆஜராகவில்லை. அவரது சார்பில் தே.மு.தி.க வழக்கறிஞர்கள் ஆஜராகி இவ்வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து  ஐகோர்ட்டில் உத்தரவிடப்பட்ட அந்த நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினி, வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

 

 
  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago