முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சென்ட்ரலில் இலவச ‘வை-பை’ இன்டர்நெட் வசதி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.28: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளுக்காக ‘வை-பை’ இணைப்பை அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ‘வைபை’ இணைப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இந்த ‘வைபை’ இன்டர்நெட் இணைப்பு முதல் 30 நிமிடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து அவர்கள் இன்டர்நெட்டை தொடர்ந்து உபயோகித்தால் அதற்கு குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டும்.

பயணிகள் ‘railwire’ என்ற இணையதள முகவரியில் தங்களது செல்போன் எண்ணை கொடுத்தால் இணையதளத்தை இயக்க தேவையான பாஸ்வேர்டு அவர்கள் செல்போனுக்கு வரும். அந்த பாஸ்வேர்டை பயன்படுத்தி அவர்கள் இணையதளத்தை உபயோகப்படுத்தலாம்.

இதனைத் தொடர்ந்து எழும்பூர் ரெயில் நிலையத்திலும் இந்த ‘வைைப’ வசதி ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தென்னக ரெயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். பின்னர் காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘வைபை’ சேவை, மாதிரி திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

தென்னக ரெயில்வே துறைக்கு 40 தானியங்கி நடைமேடைகள் மற்றும் 39 ‘லிப்ட்’கள் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 7 தானியங்கி நடைமேடைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுவப்படும்.

சென்னை, ஈரோடு, மதுரை, கரூர், சேலம் ஆகிய ரெயில் நிலையங்களில் அவசர மருத்துவ உதவி மையம் உள்ளது. தானியங்கி உணவு பொட்டலம் வழங்கும் கருவி அடுத்த மாதம் (அக்டோபர்) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நிறுவப்படும். ஓய்வு அறைகளை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி சென்னை எழும்பூர், மதுரை, கோவை, ராமேஸ்வரம் ஆகிய ரெயில் நிலையங்களில் உள்ளது. இந்த வசதி ஈரோடு, திருச்சி, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையங்களுக்கும் விஸ்தரிக்கும் பணியில் முன்னேற்றம் உள்ளது. சென்னையில் இருந்து பாலக்காடு வரை 18 ரெயில் நிலையங்களில் உணவு மையங்கள் உள்ளன.

547 ரெயில் பெட்டிகளில் ‘பயோ டாய்லெட்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர மயமாக்கப்பட்ட சலவையகம் ‘கொச்சுவல்லி’ என்ற இடத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும். ஒருங்கிணைந்த பாதுகாப்பு அறை ரூ.41.60 கோடி செலவில் 14 ரெயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்