முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி உலா

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, செப்.28 - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா தொடக்க நாளன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடக் கொடியுடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் உலா வந்தனர். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க மாலை 5.36 - 6 மணி இடையே பிரம்மோற்சவ கருடக் கொடி, தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான நேற்று முன்தினம் இரவு, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன்பு, யானை, குதிரை,காளை போன்ற பரிவட்டங்கள் சென்றன. பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.

பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, காலை 9 மணியளவில் சிறிய சேஷ வாகன சேவையும், இரவு 9 மணியளவில் அன்ன வாகன சேவையும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago