முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியோன், செப்.28 - இன்சியோனில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆடவர் வில்வித்தை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வென்றதன் மூலம் இந்தியா தங்கத்தை கைப்பற்றியது.
தனிநபர் பிரிவில் சவ்ரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல் மூலம் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் கிடைத்தது. மலேசியா ஆடவர் ஸ்குவாஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவ்ரவ் கோஷல் தலைமையில் இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
சுமார் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-0 என்று வெற்றி பெற்றது. முதலில் 25 வயது வீரர் ஹரிந்தர்பால் சிங் மலேசிய வீரர் இஸ்கந்தர் மொகமது அஸ்லான் பின் என்ற வீரரை 11-8, 11-6, 8-11, 11-4 என்ற செட்களில் வென்றார். சவ்ரவ் கோஷல் முதல் ஆட்டத்தில் 6-11 என்று பின் தங்கி பிறகு மீண்டெழுந்து 11-7, 11-6, 12-14, 11-9 என்று வெற்றி பெற்றதையடுத்து 2-0 என்று வென்று தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

இந்தியாவின் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் அடங்கிய அணி, தென் கொரியாவை 227-225 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றது. முன்னதாக, இந்தியாவின் ஜிது ராய் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார்.
இந்திய மகளிர் அணி மலேசியாவிடம் 0-2 என்று இறுதிப் போட்டியில் தோல்வி தழுவி வெள்ளி வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago