முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கொலு

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, செப் 29 :

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கண்டுகளித்தனர். 

கொலுவில் இடம் பெற்றுள்ள சித்திரை திருவிழா தேரோட்டம், தெப்பத் திருவிழா மாதிரி செயல் முறைகள் உள்ளிட்டவை குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன. திருக்கோயில் அம்மன் சன்னதி 2ம் பிரகாரத்தில் ஜெயமங்களம், சுபமங்களம் எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இக்கொலுவை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இதில் அருள்மிகு மீனாட்சியம்மன் அவதரிப்பது, திருக்கல்யாணம் உள்ளிட்டவையும், அஷ்டலட்சுமி, பிரம்மா மற்றும் கலைமகள் என மூன்று தேவியரின் சிறப்புகளை விளக்கும் வகையிலும் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. முருகன், சிவன் என அனைத்து கடவுள்களையும் மையப்படுத்தி கொலுவானது பார்ப்போரை பரவசப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இடதுபுற அரங்குகளில் சுவாமிகள் பொம்மைகளும், வலதுபுறத்தில் அம்மன் திருவிழா காலங்களில் மாசி வீதிகளில் வலம் வரும் போது பயன்படுத்தப்படும் திருக்கோயில் சிறப்பு வாகனங்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இதில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் கோலம் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.

கொலு முடியும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாசி வீதி தேரோட்டம், தெப்பத்திருவிழா, தங்கரதம் உலா மற்றும் விநாயகர் பெற்றோரை வலம் வருவது, முருகன் மயிலில் உலகை வலம் வருவது ஆசியன தத்ரூபமாக உள்ளன. இவை குழந்தைகளை மிகவும் கவர்வதாக உள்ளன. இதை முன்னிட்டு கோயில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரமும் பக்தர்களை பரவசப்படுத்துவதாக உள்ளது.

பொற்றாமரை குளத்தின் கிழக்கு பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீனாட்சி, விநாயகர் திருவுருவங்களும் காண்போரை கவர்கின்றன. கண்ணை பறிக்கும் மின் விளக்கு அலங்காரங்கள் பக்தர்களை கவரும் அதே வேளையில் கருத்தை கவரும் கலை நிகழ்ச்சியான பரத நாட்டியம், பக்தி இன்னிசை, சொற்பொழிவு ஆகியன காலை, மாலையில் நடைபெறுகின்றன. மொத்தத்தில் நவராத்திரி விழா நவரசம் கொட்டும் விழாவாக பக்தர்களை மகிழ்விக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் உத்தரவின் பேரில் இணை  ஆணையர் நடராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago